Idhu Naal lyrics
by Jonita Gandhi
இது நாள் வரையில்
உலகில் எதுவும்
அழகில்லை என்றேன்
எனை ஓங்கி அறைந்தாளே
குறில் கூச்சத்தால்
நெடில் வாசத்தால்
ஒரு பாடல் வரைந்தாளே
இன்றெந்தன் வீட்டின்
கண்ணாடி பார்த்துப்
பிறந்தநாள் வாழ்த்துச்
சொன்னேனே ஏ… ஏ… ஏ…
இதுவரை ஏதுமே உலகில்
அழகில்லை
என்று நான் நினைத்ததைப்
பொய் ஆக்கினாள்
இதுவரை ஏதுமே
மொழியில் சுவை
இல்லை
என்று நான் நினைத்ததைப்
பொய் ஆக்கினாள்
இதுவரை காற்றிலே
தூய்மை இல்லை
என்றேனே அனைத்தையும்
பொய் ஆக்கினாள்
ஓ மெத்தை மேலே வான்
மேகம் ஒன்று
உக்கார்ந்து கொண்டு உன்
கண்ணைப் பார்த்தால்
அய் அய் அய்யய்யோ
இனிமேல் நீ என்ன
செய்வாயோ?
என் வாழ்க்கை முன் போல்
இல்லை
அதனால் என்ன… பரவா
இல்லை…
இனிமேல் நீ என்ன
செய்வாயோ?......
இதுவரை ஏதுமே உலகில்
அழகில்லை
என்று நான் நினைத்ததைப்
பொய் ஆக்கினாள் ஆ… ஆ…
ஓ… ஓ…
அழகில்லை என்றேன்
அதை அவள் பொய்
ஆக்கினாள்
இசை சுகம் இல்லை
என்றேன்
அதை அவள் பொய்
ஆக்கினாள்
மொழியில் சுவை
இல்லை என்றேன்
அதை அவள் பொய்
ஆக்கினாள்
அவள் அவள் அவள் அவள்
பொய் ஆக்கினாள்
அவள் அவள் அவள், அவள்
அவள் அவள்…