ORU NAAL lyrics

by

Majoe


[Verse 1]
என் நெஞ்சில் சோகம் மாறவில்லை
நாடு இன்னும் எங்கள் கையில் இல்லை
பிள்ளைகளை மறக்க யேலுமா
எந்த நாட்டில் இருந்தாலும் நாங்க ஒன்று
எங்க பிறந்தாலும் தமிழ் என்று சொல்லு
வலிகளை மறக்க யேலுமா

[Pre-Chorus]
உன் கண்ணில் ரத்தம் ஓடுது
என் மண்ணில் சத்தம் கூடுது
நட‌ந்தது யேன்
வெறு‌ம் கனவா

[Chorus]
எப்போ ஒரு நாள் (ஒரு நாள்)
எந்த இனம் வாழுமா (இனம் வாழுமா)
இரவுகள் போகுமா (போகுமா)
பகலும் வருமா (வருமா)
எப்போ ஒரு நாள் (எப்போ ஒரு நாள் )
எந்த இனம் வாழுமா (இனம் வாழுமா)
இரவுகள் போகுமா (இரவுகள் போகுமா)
பகலும் வருமா (பகலும் வருமா)

[Verse 2]
தாய் மொழி நம் தமிழ் மொழி
நாம் பேசிய முதல் மொழி
உலகெல்லாம் பரந்தமொழி
உயிர் போனாலும் மறக்காதமொழி
இந்த வேதனை உனக்கு தெரியாது
நான் படிக்கிற வலி உனக்கு புரியாது என்னை மன்னிச்சுக்கொள் நான் உன்னை மறக்கவில்லை
ஆனா நினைச்சுக்கொள் உன்னை விட முடியாது
இப்ப இல்லாட்டா எப்ப நல்ல காலம்
நாங்க சேர்ந்தா ஈழத்துக்கு பாலம்
இ‌ன்னு‌ம் மறையல மறுபடி வாறோம்
இழந்தது எல்லாம் எங்களுக்கு பாடம்
பல பேர்கள் இழந்தது வாழ்க்கை
சில பேர்கள் விட்டது நாட்டை
இனி எழுந்திடுவோம் ஒழியாக
ஒன்றுபடுவோம் தமிழினமாக
[Pre-Chorus]
உன் கண்ணில் ரத்தம் ஓடுது
என் மண்ணில் சத்தம் கூடுது
நடந்தது யேன்
வெறும் கனவா

[Chorus]
எப்போ ஒரு நாள் (ஒரு நாள்)
எந்த இனம் வாழுமா (இனம் வாழுமா)
இரவுகள் போகுமா (போகுமா)
பகலும் வருமா (வருமா)
எப்போ ஒரு நாள் (எப்போ ஒரு நாள் )
எந்த இனம் வாழுமா (இனம் வாழுமா)
இரவுகள் போகுமா (இரவுகள் போகுமா)
பகலும் வருமா
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z #
Copyright © 2012 - 2021 BeeLyrics.Net