Ummai Pola Yarundu lyrics

by

Ostan Stars


Ummai Pola Yarundu
உம்மை போல யாருண்டு
நன்மை செய்ய நீருண்டு
உம்மைத் தானே நம்புவேன்
என் தேவா

உம்மைதான் எந்தன் வாழ்வில்
ஆதாரமாய் நினைத்து உள்ளேன்
நீர் இல்லா எந்தன் வாழ்க்கை
வீணாய் தானே போகுதைய்யா – உம்மை போல

எல்ஷடாய் ஆராதிப்பேன்
எலோஹிம் ஆராதிப்பேன்
அடோனாய் ஆராதிப்பேன்
இயேசுவே ஆராதிப்பேன் – உம்மை போல

கலங்கி நின்ற என்னைக் கண்டு
கண்ணீரைத் துடைத்தவரே
காலமெல்லாம் கண்மணிபோல
கரம்பிடித்து காத்தவரே – உம்மை போல

மரணத்தின் பாதைதனில்
மனம் தளர்ந்து நின்ற என்னை
மருத்துவராய் நீரே வந்து
மறுவாழ்வு தந்தீரைய்யா – உம்மை போல
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z #
Copyright © 2012 - 2021 BeeLyrics.Net