Nandri solli lyrics
by Ostan Stars
நன்றி சொல்லி உம்மை பாட வந்தோம்
உம் காருண்யத்தை எண்ணி போற்ற வந்தோம்
வார்த்தையினால் நீர் சொன்னதெல்லாம்
கரங்களினால் இன்று நிறைவேற்றினீர்
நன்றி -2 சொல்வோம் உயிர் உள்ளவரை
ஒன்றும் குறையாமல் காத்திடும் நல்லவரை
காற்றுமில்ல மழையுமில்ல
ஆனாலும் வாய்க்காலை நிரப்பினீரே
உடன்படிக்கை செய்து நடத்தி வந்தீர்
மாறாமல் எப்போதும் காத்துக் கொண்டீர்
கைவிடாமல் விட்டு விலகிடாமல்
நெருங்கின பாதையிலும் கூட வந்தீர்
வெட்கப்பட்ட தேசத்திலே
கீர்த்தியும் புகழ்ச்சியுமாக்கினீரே